செங்கல்பட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்.

Update: 2018-01-08 22:25 GMT

செங்கல்பட்டு,

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அவர்களுக்கு ஆதரவாக செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் வேலன், சேஷாத்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்பட 100–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் கோ‌ஷமிட்டனர்.

மேலும் செய்திகள்