ஜீப்-லாரி மோதல்; 5 பேர் பலி சுற்றுலா சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்
சித்ரதுர்கா அருகே லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் சுற்றுலா சென்று திரும்பிய 5 பேர் பலியானார்கள்.
சிக்கமகளூரு,
சித்ரதுர்கா தாலுகா சிபாரா கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை ஜீப் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் பெங்களூருவில் இருந்து ராஜஸ்தான் நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. திடீரென, ஜீப் டிரைவர் லாரியை முந்திச் செல்ல முயன்றதாக தெரிகிறது. இந்த சந்தர்ப்பத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தாறுமாறாக ஓடி லாரியின் பின்பகுதியில் மோதியது.
இந்த விபத்தில் ஜீப்பின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இதில் ஜீப்பில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி அபய குரல் எழுப்பினர். இந்த சத்தத்தை கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்து ஜீப்பில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது முடியவில்லை. அதற்குள் ஜீப்பின் இடிபாடுகளில் சிக்கிய 5 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்திருந்தனர். படுகாயம் அடைந்த 8 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சித்ரதுர்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் மற்றும் சித்ரதுர்கா புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் விபத்தில் உடல் நசுங்கி பலியான 5 பேரின் உடல்களை, தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் பெலகாவி மாவட்டம் கொக்கனூர் கிராமத்தை சேர்ந்த சிவலிங்கா கக்கனூர், ராகேஷ் பாகுபலி ஜெயின், சித்தார்த், சிவலிங்கா, வினோத் ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் அதேப்பகுதியை சேர்ந்த சித்தார்த் துண்டய்யா, துண்டய்யா, மகாதேவா, அனந்த கனிகட்டி, ரமேஷ் துண்டியா, சுனில் ரமேஷ், மகாந்தேஷ், சோமசேகர் ஆகிய 8 பேருடன் மைசூருவிற்கு சுற்றுலா சென்றுவிட்டு பெலகாவிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி பலியானது தெரியவந்தது. மேலும் படுகாயம் அடைந்த சிலன் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இதுதொடர்பாக சித்ரதுர்கா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.