டிராக்டர் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலி டிரைவர் கைது
டிராக்டர் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலி டிரைவர் கைது
மணல்மேடு,
மணல்மேடு கீழத்தெருவை சேர்ந்தவர் சம்பத் (வயது 38). விவசாய கூலித்தொழிலாளி. நேற்று சம்பத், ஒரு மோட்டார் சைக்கிளில் பந்தநல்லூரில் இருந்து மணல்மேடு நோக்கி சென்று கொண்டிருந்தார். மணல்மேடு அருகே உத்திரங்குடி என்ற இடத்தில் சென்றபோது அந்த வழியாக கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் ஒன்று திடீரென சம்பத் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சம்பத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு டிராக்டர் டிரைவர் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருண்மொழிதேவன் ரைஸ்மில் தெருவை சேர்ந்த கலியமூர்த்தி (45) என்பவரை கைது செய்தனர்.