கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர் கழுத்தை அறுத்து கொன்ற பெண்
சேர்ந்து இருந்ததை கணவர் நேரில் பார்த்ததால் ஆத்திரம் அடைந்த பெண், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.;
தானே பிவண்டி சாந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார்(வயது30). இவரது மனைவி குல்ஸ்பா(28). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
மனோஜ்குமார் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தார். இந்தநிலையில், குல்ஸ்பாவுக்கு அந்த பகுதியை சேர்ந்த ரிஸ்வான் என்ற வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
இந்தநிலையில் 2 மாதங்கள் ஆன நிலையில், வெளியூரில் இருந்து மனோஜ்குமார் சம்பவத்தன்று வீடு திரும்பி உள்ளார். அப்போது, குல்ஸ்பா கள்ளக்காதலன் ரிஸ்வானுடன் வீட்டில் உல்லாசமாக இருந்த காட்சியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். மேலும் இருவரையும் கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த குல்ஸ்பாவும், ரிஸ்வானும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். பின்னர் வீட்டில் இருந்த கத்தியால் மனோஜ்குமாரின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் இருவரும் வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்தநிலையில், ரிஸ்வான் தனது நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறி, இருவரும் தலைமறைவாக இருப்பதற்கு உதவிகேட்டு உள்ளார். இதைக்கேட்டு பயந்துபோன அவரது நண்பர், உடனே இதுபற்றி சாந்திநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்ததும் போலீசார் மனோஜ்குமாரின் வீட்டிற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, குல்ஸ்பா மற்றும் அவரது கள்ளக்காதலன் ரிஸ்வான் ஆகிய இருவரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.