5–வது நாளாக வேலைநிறுத்தம்: போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் 265 பேர் கைது
போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று 5–வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதை யொட்டி நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் 265 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்,
ஊதிய உயர்வை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4–ந் தேதி வேலை நிறுத்த போ ராட்டத்தை தொடங் கினர் கள். இதில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழி லாளர் கள் பங்கேற்றுள்ளதால் மாநிலம் முழுவதும் பஸ் போக்கு வரத்து ஸ்தம்பித்துள் ளது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார் கள்.
குமரி மாவட்டத்திலும் போக்குவரத்து தொழி லாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள் ளதால் மாவட்டத்தில் பெரும் பாலான பஸ்கள் ஓடவில்லை. போராட்டத்தை கைவிடும்படி ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனாலும் போராட்டத்தை கைவிட தொழிற்சங்க நிர் வாகிகள் மறுத்துவிட்டனர். தங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறி வித்துள் ளனர். இதற்கிடையே குமரி மாவட்டத்தில் போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து நோட்டீசு அனுப் பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போக்கு வரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் நேற்று 5–வது நாளாக நீடித்தது. இதனால் குமரி மாவட்டத்தில் நேற்றும் பெரும்பாலான பஸ்கள் இயக் கப்படவில்லை. குமரி மா வட்டத்தில் மொத்தம் 814 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் நேற்று 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற் காலிக டிரைவர், கண் டக்டர் மூலமாக இந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நகரங்களில் பஸ் போக்கு வரத்து ஓரளவுக்கு இருந்தாலும் கிராமப்புறங்களில் மிகவும் குறைவான அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் கிராமப்புற மக்கள் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் பரிதவிக்கிறார்கள்.
நேற்று காலை மற்றும் மாலையில் பஸ் நிலையங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ– மாணவி களின் கூட்டம் அதிகமாக இருந்தது. நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம், மார்த்தாண்டம் பஸ் நிலை யங்களில் அதிகமான கூட்டம் காணப்பட்டது. ஆனால் பஸ்கள் குறைவான அள விலேயே இயக்கப்பட்டதால் மாணவ–மாணவிகள் அவதிப் பட்டனர். இயக்கப்பட்ட அனைத்து பஸ்களிலும் கூட்டம் அலைமோதியது. பயணிகள் முந்தியடித்துக் கொண்டு பஸ்களில் ஏறி னார்கள்.
பஸ்கள் குறைவான அளவி லேயே ஓடுவதால் குமரி மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ரெயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க வேலைநிறுத்தத்தில் ஈடுபட் டுள்ள போக்குவரத்து தொழி லாளர்கள் அனைவரும் நாகர் கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் நேற்று காலையில் ஆர்ப் பாட்டம் நடத்தினர். ஆர்ப் பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்க மோகனன் தலைமை தாங் கினார். எல்.பி.எப். நிர்வாகி கனகராஜ், சங்கரநாராயணன், தயானந்தன், ஆல்பர்ட், சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பி னர். ஆர்ப்பாட்டத்தில் பல் வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் திர ளாக கலந்துகொண் டனர்.
மேலும், முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், தி.மு.க. நகர செயலாளர் மகேஷ், பெர்னார்டு ஆகி யோரும் போக்குவரத்து தொழி லாளர்களுக்கு ஆதர வாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதுபற்றி தொழிற்சங்க நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது, ‘எங்களது நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தரவேண்டும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும்’ என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் ஏரா ளமானோர் கலந்து கொண்டதால், ராணிதோட் டத்தில் இருந்து ஆசாரிபள்ளம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
ஆனால் இந்த ஆர்ப்பாட் டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்றும், போலீசாரின் தடையையும் மீறி ஆர்ப்பாட்டம் நடந்த தாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபி தலைமையில், இன்ஸ் பெக் டர்கள் பர்ணபாஸ், அருள் ஜாண் ஒய்ஸ்லின்ராஜ், பென் சாம், சாம்சன் மற்றும் போலீ சார் குவிக்கப்பட் டனர்.
தடையை மீறி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப் பாட்டம் நடத்தியதால் அவர் கள் அனைவரையும் போலீ சார் கைது செய்தனர். மொத்தம் 265 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் போலீஸ் வா கனத்தில் ஏற்றி ஆசாரி பள்ளத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்த னர். மாலையில் அனை வரும் விடுவிக்கப் பட்டனர்.