நெல்லை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம்
நெல்லை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில்,
தமிழக அரசின் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. சான்றுகளுக்கு ஒப்புதல் வழங்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினியும், இணையதள சேவைக்கு மோடமும் வழங்கப்பட்டு, கட்டணத்தை அரசே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 11 மாதங்களுக்கு மேலாக இணையதள கட்டணம் செலுத்தவில்லை. இணையதள கட்டணத்திற்கு பணம் வழங்க வேண்டும். பராமரிப்பு கட்டணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவில் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ளே அமர்ந்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. சங்க தலைவர் அருள்மாரி தலைமை தாங்கினார். சங்க செயலாளர் ராஜ்குமார், ராம்குமார், பவானி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முனியாண்டி, பெருமாள்சாமி, வேலம்மாள், மல்லிகா, மணிமேகலை உள்ளிட்ட ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மானூர் தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மானூர் வட்ட தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். இதில் தாலுகா செயலாளர் பாலரவிசங்கர், பொருளாளர் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் இரவு நேர உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட செய்தி தொடர்பாளர் வசந்தகுமார், தென்காசி வட்ட தலைவர் திருப்பதி, செயலாளர் பாலமுருகன், பொருளாளர் இசக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர். வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த போராட்டத்தில் வட்டார தலைவர் ஆறுமுகம், செயலாளர் பெரியசாமி, பொருளாளர் சச்சின், துணை பொறுப்பாளர்கள் சின்னராஜ், சங்கரநாராயணன், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் இரவு நேர தர்ணா போராட்டம் நடத்தினர். வட்ட தலைவர் முருகேசன், செயலாளர் கணேசன், பொருளாளர் வள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த தர்ணா போராட்டத்துக்கு மாவட்ட துணை செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். முன்னாள் துணை செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் முத்துச்செல்வன், மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த போராட்டத்தில் திரளான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.