வாணியம்பாடி அருகே காவலாளி அடித்துக் கொலை
வாணியம்பாடி அருகே காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி,
வாணியம்பாடியை அடுத்த தும்பேரி கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 65). இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். சேட்டு வாணியம்பாடி கச்சேரி ரோட்டில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
கடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சேட்டு வாணியம்பாடிக்கு வந்தார். 3 நாட்கள் ஆகியும் வீட்டுக்கு சேட்டு வராததால் அவரது மகன் முருகேசன் நேற்று காலை தனது தந்தை வேலை செய்யும் தோல் தொழிற்சாலைக்கு வந்து கேட்டார். அப்போது அங்கிருந்தவர்கள் சேட்டு வேலைக்கு வந்து 2 நாட்கள் ஆகிறது என்றனர்.
இதனால் சந்தேகம் அடைந்த முருகேசன் மற்றும் உறவினர்கள் சேட்டுவை பல இடங்களில் தேடினர். பின்னர் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்தபோது கடந்த 5-ந் தேதி இரவு சேட்டு நடந்து சென்றது தெரியவந்தது. சிறிது தூரம் நடந்து சென்ற அவர் பின்னர் காணவில்லை.
இதையடுத்து அங்கிருந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கிடங்குக்கு சென்று பார்த்தபோது அங்கு சேட்டு பிணமாக கிடந்தார். தலை மற்றும் உடல் முழுவதும் காயங்கள் இருந்தது. இதனால் சேட்டுவை மர்ம நபர்கள் அடித்துக் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேட்டுவை அடித்துக் கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.