வேலூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்;
வேலூர்,
ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு தலைவர்கள் தலைமை தாங்கினர். கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
தொழிற்சங்க கூட்டுக்குழு தலைவர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், ‘கோரிக்கைகளை வலியுறுத்தி எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டம் காரணமாக வேலூர் மாவட்டத்தில் 20 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. பல பஸ்கள் தற்காலிக டிரைவர்களை கொண்டு இயக்கப்படுகிறது. இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு., தொ.மு.ச., எல்.பி.எப்., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., போன்ற பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்’ என்றார்.
இந்த போராட்டத்தில் ஏராளமான போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வேலூர் புதிய பஸ் நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்த வந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். போராட்டம் நடத்த அனுமதி கிடையாது, மீறினால் கைது செய்வோம் என்றனர். இதையடுத்து போராட்டம் நடத்த வந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.