தாலுகா அலுவலக வளாகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம்
மணப்பாறை, திருவெறும்பூரில் தாலுகா அலுவலக வளாகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் விடிய, விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
மணப்பாறை,
மணப்பாறையில் தாலுகா அலுவலக வளாகத்தில் விடிய, விடிய கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டா மாறுதல், வருமானம், இருப்பிடம், சாதி உள்ளிட்ட சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் செலவினத் தொகை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கிட வேண்டும். வெளி மாவட்டங்களில் இருந்து வந்து பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்களை அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல் செய்ய வேண்டும். உட்பிரிவு பட்டா மாறுதல்களில் கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரைக்கு பின் உட்பிரிவு செய்ய வேண்டும், கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராமங்களுக்கு தரும் ஊக்கத் தொகையை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் நாளை (புதன்கிழமை) கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். பின்னரும் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் 18-ந் தேதி முதல் காலவரையற்ற விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் பொங்கலையொட்டி விலையில்லா வேட்டி, சேலைகளை தங்களின் சொந்த செலவில் எடுத்துச் சென்று வினியோகம் செய்வதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இதே போல் திருவெறும்பூர் தாலுகா அலுவலக வளாகத்தில் கிராமநிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் குழ.அந்தோணி துரை தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ஜெ.ஜெயலெட்சுமி, வட்ட தலைவர் பெருமாள், வட்ட செயலாளர் சா.சிவபிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டமும் விடிய, விடிய நடைபெற்றது.