குழவிக் கல்லால் தாக்கி தந்தை-அக்காள் கொலை வாலிபர் கைது
கலசபாக்கம் அருகே குழவிக் கல்லால் தாக்கி தந்தை, அக்காளை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கலசபாக்கம்,
கலசபாக்கம் அருகே உள்ள கோவில்மாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 65), ஓய்வு பெற்ற தபால் ஊழியர். இவருக்கு கல்யாணி (35), சித்ரா (24) ஆகிய 2 மகள்களும், சிவநேசன் (30) என்ற மகனும் உள்ளனர். கல்யாணி திருமணமாகி கணவரை பிரிந்து தந்தையுடன் வசித்து வந்தார்.
சிவநேசன் பாலிடெக்னிக் படித்துள்ளார். இவர் கோவில் மாதிமங்கலம் தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றினார் என்று கூறப்படுகிறது. மேலும் பகுதி நேரமாக தனியார் நிறுவன செல்போன் சிம்கார்டுகளையும் விற்பனை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது மனைவியுடன் தகராறு ஏற்பட்டு மனைவியை பிரிந்து தந்தையுடன் வசித்து வருகிறார்.
ராமச்சந்திரன், கல்யாணி, சித்ரா, சிவநேசன் ஆகிய 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இதற்கிடையில் அவரது அக்காள் கல்யாணிக்கும், சிவநேசனுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை சிவநேசன், அவரது தந்தை ராமச்சந்திரனிடம் செலவுக்கு பணம் கேட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது ராமச்சந்திரனும், கல்யாணியும் சிவநேசனிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த சிவநேசன் வீட்டில் உள்ள குழவிக்கல்லை தூக்கி கல்யாணியின் தலையில் போட்டார். இதனை தடுக்க வந்த ராமச்சந்திரன் தலை மீதும் குழவிக்கல்லால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ராமச்சந்திரன், கல்யாணி ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
இதையடுத்து சிவநேசன் தங்கை சித்ராவையும் தாக்க வந்துள்ளார். இதனால் பயந்து போன சித்ரா வீட்டில் இருந்து சத்தம் போட்டபடி வெளியில் ஓடி வந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். தந்தை, மகள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர். பின்னர் அவர்கள் தப்பியோட முயன்ற சிவநேசனை மடக்கி பிடித்தனர்.
இதுகுறித்து கடலாடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொலையான தந்தை, மகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிவநேசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியை பிரிந்த சிவநேசன் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தந்தை, மகள் கொலையான சம்பவத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.