பயிர்காப்பீட்டு தொகை வழங்ககோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
விவசாய சங்கத்தினர் பயிர்காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.;
விருதுநகர்,
தமிழ் விவசாய சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கான பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும், கடந்த ஆண்டிற்கு 100 சதவீத பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும், 60 வயதுக்கு மேல் ஆன விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை, கிராமங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், விவசாயிகளுக்கு தரமான இடு பொருட்கள் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளுக்காக இந்த போராட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கலெக்டர் உறுதி அளிக்க வேண்டும் எனக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த முற்றுகை போராட்டத்தில் சங்க மாவட்ட நிர்வாகிகள் ரெங்குதாஸ், மாரிச்சாமி, நவநீதன் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து விவசாயத்துறை அதிகாரிகள், விவசாய சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். அதன் பின்னர் சங்க பிரதிநிதிகள் 5 பேர் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதைதொடர்ந்து முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.