மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து சிவகங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2018-01-08 21:45 GMT

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு எதிராக விரோத போக்கை கடைப்பிடிப்பதாக மத்திய அரசை கண்டித்து சிவகங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிவகங்கை வட்டார தலைவர் சோனைமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

 இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி மாநில செயலாளர் ஸ்ரீவித்யா, மாவட்ட விவசாய பிரிவு தலைவர் அரசு உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பெரியசாமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்