8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசுப் பணி

இந்திய உணவுக் கழகத்தில் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு கல்வித்தகுதி கொண்டவர்களுக்கு பணிவாய்ப்பு வழங்கப்படுகிறது.

Update: 2018-01-08 06:39 GMT
ந்தியாவின் பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய உணவுக் கழகம், குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு கல்வித்தகுதி கொண்டவர்களுக்கு பணிவாய்ப்பு வழங்குகிறது.

குஜராத் மண்டலத்தில் உள்ள இதன் அலுவலகங்களிலும், டெப்போக்களிலும் ‘வாட்ச்மேன்’ பணிபுரிய தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 107 இடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள், 1.12.2017 தேதிப்படி 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு விதிமுறைகளின்படி வயதுத் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்களுக்கான குறைந்தபட்சக் கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.

முக்கியத் தேதிகள்:

இணையதளம் மூலம் விண்ணப்பம் பெறுவது தொடங்கிய நாள்: 30.12.2017

இணையதள விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசித் தேதி: 29.1.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் உத்தேசத் தேதி: 11.2.2018

கூடுதல் விவரங்களுக்கும், இணைய விண்ணப்பப் படிவத்துக்கும் விண்ணப்பதாரர்கள் அணுக வேண்டிய இணையதள முகவரி: www.fcijobportalgujarat.com

மேலும் செய்திகள்