கிடப்பில் போடப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள்
அபிஷேகப்பாக்கத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
பாகூர்,
மணவெளி தொகுதி அபிஷேகப்பாக்கத்தில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் தேவைக்காக அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது சுகாதாரமாக இல்லாததால் உடல்நல பாதிக்கப்படுகிறது. எனவே குடிநீரை ஆரோக்கியமாக வினியோகம் செய்ய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவேண்டும் என்று அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் அபிஷேகப்பாக்கம் - மடுகரை சாலையில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கான கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று பல மாதங்களுக்கு முன்பு குடிநீர் நிலைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
ஆனால் குடிநீரை சுத்தி கரிப்பதற்கான பணிகள் அமைக்கப்படவில்லை. என்ன காரணம் என்று தெரியாமல் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சுகாதாரமற்ற குடிநீரை மக்கள் தொடர்ந்து பயன் படுத்தும் அவல நிலை உள்ளது.
எனவே குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகளை விரைவில் முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று டி.என்.பாளையம், நத்தமேடு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.