புதுச்சேரி வாணியர் முன்னேற்ற சங்க ஐம்பெரும் விழா

புதுச்சேரி வாணியர் முன்னேற்ற சங்கம் சார்பில் சங்க வெள்ளிவிழா,

Update: 2018-01-07 22:21 GMT

புதுச்சேரி,

தென்னிந்திய வாணியர் சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு, நிதி பங்களிப்பு, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப்பரிசளிப்பு, முதியவர்களுக்கு பாராட்டு என ஐம்பெரும் விழா சாயிபாபா திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு புதுச்சேரி வாணியர் முன்னேற்ற சங்க தலைவர் ராமச்சந்திரன் செட்டியார் தலைமை தாங்கினார். மாநில வாணியர் சங்க தலைவர் கலியபெருமாள் செட்டியார் முன்னிலை வகித்தார். வாணியர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் பழனி செட்டியார் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பழமலை, ஆர்க்காடு அருட்சோதி அறக்கட்டளை நிறுவனர் சோதி செட்டியார், அகில பாரதீய தைலிக் சாகு மகாசபா ராமலிங்க செட்டியார் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். அப்போது தென்னிந்திய வாணியர் சங்க கல்வி நிதியுதவி திட்டத்துக்கும், விருத்தாசலம் நகர வாணியர் சங்க திருமண மண்டப கட்டிட பணிக்கும் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சங்க ஆட்சிமன்ற குழுவை சேர்ந்த ஜெயபால் செட்டியார், சதானந்தம் செட்டியார், தனபால் செட்டியார், வாணியர் சங்க செயலாளர் ராமலிங்க செட்டியார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்