உலக நன்மைக்காக சிங்கிரிகோவிலுக்கு பாதயாத்திரை

உலக நன்மைக்காக புதுவையில் இருந்து சிங்கிரிகோவிலுக்கு பாதயாத்திரை நடந்தது.

Update: 2018-01-07 22:14 GMT

புதுச்சேரி,

புதுவை ஸ்ரீலட்சுமி நரசிம்ம ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில் உலக நன்மைக்காக ஆண்டுதோறும் சிங்கிரிகோவிலுக்கு புனித பாதயாத்திரை மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதன்படி 22–வது ஆண்டாக நேற்று இந்த யாத்திரை நடந்தது.

இதையொட்டி புதுவை காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து நேற்று இந்த யாத்திரை தொடங்கியது. யாத்திரைய வேளுக்குடி கிருஷ்ணன் சாமிகள் முன்னிலையில் திருக்கோவிலூர் ஜீயர் சுவாமிகள் தொடங்கிவைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாதயாத்திரையாக புறப்பட்டுச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த பாதயாத்திரையில் பல்வேறு பஜனை குழுக்களை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். பாத யாத்திரை முன்னிட்டு வழி எங்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பாத யாத்திரை முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், தவளக்குப்பம் வழியாக சிங்கிரிகோவில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சாமி கோவிலை சென்றடைந்தது. அங்கு பக்தர்களுக்கு சாமிக்கு பூஜிக்கப்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.


மேலும் செய்திகள்