பிணத்தின் பின்னணியில் பா.ஜனதாவினர் அரசியல் செய்கிறார்கள் பிரதமரின் வானொலி உரை மக்களை ஏமாற்றும் செயல்
பிணத்தின் பின்னணியில் பா.ஜனதாவினர் அரசியல் செய்கிறார்கள் என்றும், பிரதமரின் வானொலி உரை மக்களை ஏமாற்றும் செயல் என்றும் கூறி பிரதமர் நரேந்திர மோடியை முதல்-மந்திரி சித்தராமையா கடுமையாக தாக்கி பேசினார்.
மங்களூரு,

2 நாட்கள் சுற்றுப்பயணம்
தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் நடைபெற உள்ள கர்நாடக காங்கிரஸ் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக 2 நாட்கள் சுற்றுப்பயணமாக முதல்-மந்திரி சித்தராமையா நேற்று தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு வந்தார்.
ஹெலிகாப்டர் மூலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்கிய அவர், அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புத்திசாலிகள் நிறைந்த மாவட்டம்
கர்நாடகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் தற்போது பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. தேவையில்லாத காரணங்களுக்காக கொலை சம்பவங்கள் நடந்து வருகிறது. தட்சிண கன்னடா மாவட்டம் என்பது புத்திசாலிகள் நிறைந்த மாவட்டம். இங்கு தற்போது பிணத்தை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். இதை பா.ஜனதாவினர் கைவிட வேண்டும். தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளேன்.
இன்று(அதாவது நேற்று) மங்களூருவில் தங்குகிறேன். நாளை(அதாவது இன்று) உடுப்பியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன். பசீர் என்பவர் மதவாதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. பசீர் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை மாநில அரசு செய்யும். நிவாரண நிதியும் வழங்கப்படும்.
கண்டிக்கத்தக்கது
சமுதாயத்தில் நல்லிணக்கம் நிலவ வேண்டும். தட்சிண கன்னடா மாவட்டத்தில் கொலை சம்பவமோ, கலவரமோ ஏற்பட்டுவிட்டால் உடனே பா.ஜனதாவினரும், இந்து அமைப்பினரும் மந்திரி ரமாநாத் ராயை குறை கூறுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.
சட்டத்தை கையில் எடுப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பிணத்தின் பின்னணியில் பா.ஜனதாவினர் அரசியல் செய்கிறார்கள். பா.ஜனதாவினர் கொலை சம்பவத்தை வைத்து அரசியல் செய்வதை விட்டுவிட்டு மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால் இதுவரையில் அவர்கள் அப்படி எதுவும் செய்யவில்லை. பிரதமர் நரேந்திர மோடி, வானொலி மூலம் ‘மன் கீ பாத்’(மனதில் இருந்து பேசுகிறேன்) என்ற நிகழ்ச்சி நடத்தி நாடு முழுவதும் மக்களிடம் பேசி குறைகளை கேட்டறிகிறார். மேலும் வானொலியில் உரையும் ஆற்றுகிறார். ஆனால் இது ஒரு கண்துடைப்பு நாடகம். மக்களை ஏமாற்றும் செயல்.
இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா பேசினார்.