வார்டு வரையறை குறித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு

உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி ஈரோடு மாநகராட்சி பகுதியில் வார்டுகள் வரையறுக்கப்பட்டு வருகிறது.

Update: 2018-01-07 21:45 GMT

ஈரோடு,

உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி ஈரோடு மாநகராட்சி பகுதியில் வார்டுகள் வரையறுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு அரசியில் கட்சியினர் மாநகராட்சி ஆணையாளரிடம் வார்டு குறைகள் குறித்து மனு கொடுத்து வருகிறார்கள். அதன்படி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சீனி அஜ்மல்கானிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தாவது:–

ஈரோடு மாநகராட்சியில் 3 மற்றும் 4–வது வார்டுகளில் கலைஞர் நகர், போலீஸ் குடியிருப்பு, கருப்பாயிகாடு, குறிஞ்சிநகர், மாதேஸ்வரன் நகர், சி.எம்.நகர், ஆர்.என்.புதூர், தோல்ஷாப் வீதி, மேற்கு மற்றும் கிழக்கு வீதிகள் ஆகியவை உள்ளன. மேற்கண்ட அனைத்து பகுதிகளையும் 4–வது வார்டில் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறி இருந்தார்.

மேலும் செய்திகள்