கோபியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடத்தூர்,
போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், பஸ்கள் பெரும்பாலும் இயங்காமல் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கோபி பெரியார் திடல் முன்பு அனைத்து கட்சி போக்குவரத்துகழக தொழிலாளர்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்க கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கெம்ப்ராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.