சாதிமறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சட்டம் வேண்டும் எஸ்.சி., எஸ்.டி. அலுவலர் நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம்

சாதிமறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி. அலுவலர் நலச்சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-01-07 21:00 GMT
நெல்லை,

சாதிமறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி. அலுவலர் நலச்சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயற்குழு கூட்டம்


தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி. அலுவலர் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நெல்லையில் நடந்தது. மாநில துணை தலைவர் முத்தாரப்பன் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட செயலாளர் ஆசைதம்பி வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் திலகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

பாதுகாப்பு

எஸ்.சி., எஸ்.டி. பின்னடைவு காலிப்பணியிடங்களை தமிழக அரசு கண்டறிந்து சிறப்பு தேர்வுகள் மூலம் நிரப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற அவர்களுடைய பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சம் என்று தமிழக அரசு நிர்ணயம் செய்து உள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள சாலைகள், தெருக்கள் ஆகியவற்றின் பெயரோடு உள்ள சாதி பெயரை நீக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனே மூடவேண்டும். சாதி ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்தவும், சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் தனிசட்டம் இயற்ற வேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், பொருளாளர் ஜெயராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்