பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

பெண்ணை தாக்கிய வாலிபர் கைது;

Update: 2018-01-07 22:15 GMT
தா.பழூர்,

அரியலூர் மாவட்டம், தா.பழூரை அடுத்த வாழைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது 50). இவர் ஆட்டு குட்டிகளை வீட்டில் வளர்த்து வந்தார். நேற்று இவரது ஆட்டு குட்டி எதிர்வீட்டில் வசிக்கும் வடிவேல் (32) என்பவருடைய வீட்டின் தோட்டத்தில் மேய்ந்தது. இதைப்பார்த்த வடிவேல் ஆட்டு குட்டியை விரட்டி அடிக்க முயன்றுள்ளார். இதுகுறித்து கோவிந்தம்மாள், வடிவேலிடம் தட்டி கேட்டார். இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வடிவேல், கோவிந்தம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டி, உருட்டு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தா.பழூர் போலீஸ் நிலையத்தில் கோவிந்தம்மாள் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரியா வழக்குப்பதிவு செய்து வடிவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்