மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் பேட்டி

மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கூறினார்.

Update: 2018-01-07 22:30 GMT

மதுரை,

மதுரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் முகைதீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது–

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியை பொறுத்தவரை கருத்து கணிப்பில், 60 சதவீதம் பேர் பணம் பெற்று கொண்டு வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் ஜனநாயகம் வீழ்ந்து, பண நாயகம் வென்றுள்ளது. ஆர்.கே.நகர் குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்து வேறு. நாங்கள் கூறிய கருத்து வேறு. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

முத்தலாக் சட்டம் தொடர்பாக நிலைக்குழுவுக்கு அனுப்பி சில திருத்தம் கொண்டு வந்தால் தான் நிறைவேற்ற முடியும். அதனை நிலைக்குழுவுக்கு அனுப்பாததால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆகையால் நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்.

மத்திய அரசு அனைத்து முயற்சியிலும் தோல்வி அடைந்துள்ளது. மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது. குறிப்பாக மாநில கவர்னர், முதல்–அமைச்சர் போல் செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார். இதில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் இக்பால் பாட்சா, ஜாகிர்உசேன், பாய்ஸி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்