சேலம், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

சேலம் மேற்கு தொகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2018-01-07 22:00 GMT

சூரமங்கலம்,

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுரோடு, பழைய சூரமங்கலம் பகுதியில் உள்ள ரே‌ஷன் கடைகளில் அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சேலம் மேற்கு தொகுதி ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கினார். அதாவது, பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, 20 கிராம் முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், சூரமங்கலம் பகுதி அ.தி.மு.க. செயலாளர் தியாகராஜன், சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் அரியானூர் பழனிசாமி, கலால் உதவி ஆணையர் கார்த்திகேயன், மண்டல துணை தாசில்தார் ஸ்ரீதர், சேலம் மேற்கு வட்ட வழங்கல் அலுவலர் காந்தி தேசாய், கிராம நிர்வாக அலுவலர் ஜோதி, முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், முத்துநாயக்கன்பட்டி, பாகல்பட்டி, செல்லபிள்ளைக்குட்டை, சோளம்பள்ளம், அரியாகவுண்டம்பட்டி, ராமநாயக்கன்பட்டி, நரசோதிப்பட்டி, ரெட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ரே‌ஷன் கடைகளில் நடந்த நிகழ்ச்சியிலும் ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு குடும்பஅட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கினார்.

--–

படம் உண்டு....

மேலும் செய்திகள்