நாகப் பாம்பு கடித்தாலும் உயிர் பிழைத்து விடலாம்
‘பாம்பை பார்த்ததும் கம்பை தூக்காமல், அவற்றை வசப்படுத்தினால் நல்ல பாம்பும் நமக்கு நல்லதாகவே தெரியும்.
பாம்புகளை கொல்லக்கூடாது. அவைகளை பாதுகாப்பதே நம் கடமை..’ என்ற கோஷத்துடன் பாம்பு கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இளம் படை ஒன்று கிளம்பி இருக்கிறது. இந்த படை பாம்பைக் கண்டால் நடுக்கம் கொள்வதில்லை. பரிதாபப்படுகிறது.
கோவையை சேர்ந்த இயற்கை ஆர்வலர் குழுவினர் அங்குள்ள மாணவ-மாணவிகளிடம் பாம்புகள் பற்றிய புரிதலையும், விழிப் புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த குழுவின் தலைவர் சந்தோஷ்குமார். கண்களில் தென்படும் பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடுவதுதான் இவருடைய சந்தோஷமும், பொழுது போக்கும்.
சந்தோஷ்குமார் பாம்புகளை பற்றிய சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்:
‘‘நான் பள்ளியில் படித்து கொண்டிருந்தபோது விடுமுறை நாளில் வீட்டின் அருகில் உள்ள மைதானத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு ஒரு பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அதை பார்த்ததும் நண்பர்கள் பயத்தில் கூச்சலிட்டார்கள். ஒருசிலர் அதனை அடிப்பதற்கும் முயற்சித்தார்கள். ஆனால் நானோ அது வளைந்து, நெளிந்து செல்லும் அழகை ரசித்தேன். சில வினாடிகளில் அந்த பாம்பு அங்கிருந்த கற்குவியலுக்குள் புகுந்து விட்டது.
எப்படியாவது அதனை அடித்து விடவேண்டும் என்று நண்பர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு கற்குவியலை சுற்றிக்கொண்டிருந்தனர். நான் அவர்களிடம், ‘அதை ஒன்றும் செய்யாதீர்கள். நான் லாவகமாக பிடிக்கிறேன்’ என்று ஏதோ ஒரு தைரியத்தில் சொன்னேன். அதை கேட்டு நண்பர்கள் சிரித்தனர். நான் அதைப்பற்றி கவலைப்படாமல், அந்த பாம்பை பிடிப்பதில் முனைப்பு காட்டினேன். கற்களை ஒவ்வொன்றாக எடுத்தேன். அதற்குள் பாம்பு சுருண்டு கிடந்தது. பயப்படாமல் லாவகமாக கையில் அதனை பிடித்து தூக்கினேன். எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். நான் பயப்படாமல் அதனை ஒரு சாக்குப்பையில் போட்டு கட்டிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பி சென்றேன்.
நான் பாம்பை பிடித்து வைத்திருப்பதை கேள்விப்பட்டு பீதியடைந்த அக்கம்பக்கத்தினர் ‘இது நாகப்பாம்பு காட்டுப்பகுதியில் விட்டுவிடு’ என்று பயமுறுத்தினார்கள். நானும் அதன் பாதுகாப்பு கருதி வனப்பகுதியில் கொண்டு போய் விட்டுவிட்டேன். அந்த அனுபவம் பாம்புகள் மீது எனக்கிருந்த பயத்தை போக்கிவிட்டது. பின்பு அனைத்து வகை பாம்புகளை பற்றியும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், நிறைய புத்தகங்களை தேடி பிடித்து படித்தேன். அவை பாம்புகளை அணுகும் முறையை சுலபமாக்கியது. 15 ஆண்டு களாக கோவை சுற்றுவட்டார பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து விடும் பாம்புகளை பிடித்து வனப்பகுதிகளில் விட்டும் பணியை மேற்கொண்டு வருகிறேன். இதுவரை சுமார் 10 ஆயிரம் பாம்புகளை பிடித்து உள்ளேன்’’ என்கிறார்.
இவர், ஒருமுறை நாகப்பாம்பு கடித்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்திருக்கிறார். அதன் பின்பு பாம்பு கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
‘‘நாம் வசிக்கும் பகுதிக்குள் பாம்புகள் வராமல் இருக்கவேண்டும் என்றால், வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குப்பைகள், கற்கள், மரத்துண்டுகள் குவிந்து கிடந்தால் அங்கு பாம்புகள் குடியேறி விடும். விஷமில்லாத பாம்புகளுக்கு இரைப்பற்கள் அதிகம் உள்ளன. பாம்புகள் கடித்து விட்டால் அதன் கடிவாயை பார்த்ததும், விஷப்பாம்பா? விஷம் இல்லாத பாம்பா? என்பதை கண்டு பிடித்து விடலாம். கடிபட்ட இடத்தில் நிறைய பல் வரிசைகள் தென்பட்டால் அவை விஷமில்லாத பாம்புகள். விஷமுள்ள பாம்பு களுக்கு இரண்டு பற்களின் தடங்கள் அழுத்தமாக பதிவாகும். இரைப்பற்களின் தடமும் பதிவாகி இருக்கும். அதனால் அதில் இருந்து ரத்தம் வரும். விஷம் உள்ள பாம்புகள் கடிக்கும்போது, உடனே வீக்கம், தலை சுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்படும்’’ என்கிறார்.
நம்முடைய உயிரை போக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாம்புகள் விஷத்தை உமிழ்வதில்லை என்கிறார், சந்தோஷ் குமார். அவை கடிப்பதற்கான காரணத்தையும் விவரிக் கிறார்.
‘‘நாகப்பாம்புகள் கடித்தாலும், அவைகள் தனது விஷத்தை அநா வசியமாக கக்குவதில்லை. இரையை ஜீரணம் செய்வதற்கு உதவியாக விஷம் இருப்பதால் அவற்றை சீக்கிரத்தில் வீணாக்காது. சேமித்து வைக்கவே விரும்பும். நாகப்பாம்புகள் விஷத்தோடு கடித்தால் அது அதன் கோபத்தை வெளிக்காட்டுவதாகவே அமையும். பொதுவாக நாகப்பாம்புகள் 80 சதவீதம் விஷம் இல்லாத தன்மையிலேதான் கடிக்கின்றன. அவை தாக்குதலுக்கு ஆளாகும்போது, தற்காத்து கொள்வதற்கு விஷத்துடன் கடிக்கும்.
பாம்பு கடித்தால் பயமோ, பதற்றமோ அடையாமல் இருந்தால் விஷம் வேகமாக ரத்தத்தில் பரவாது. கடித்ததும் ஓடக்கூடாது. அப்படி செய்தால் விஷம் வேகமாக உடலில் பரவும். இந்தியா முழுவதும் 302 பாம்புகள் வகையாக உள்ளன. அவற்றுள் நாகப்பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், சட்டி தலையன் ஆகிய வகை பாம்புகள் தான் விஷம் உள்ளவை. சாரைப்பாம்பு உள்பட 282 வகை பாம்புகள் விஷமற்றவை. கையில் பாம்பு கடித்துவிட்டால், ஓடும் தண்ணீரில் கழுவ வேண்டும். உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும். பாம்பு கடித்த இடத்தில் துணியால் கட்டுவது, பிளேடால் அறுப்பது போன்ற செயல்களை செய்யக்கூடாது, பாம்பு களின் கடிக்கு, அவைகளின் விஷமே மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. நாகப்பாம்பு கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். ஏனென்றால் அது விஷமில்லாமலேயே கடிப்பது உண்டு. பாம்பு கடித்து விஷத்தால் இறப்பவர்களை விட, பயத்தாலும், அதிர்ச்சியாலும் இறப்பவர்களே அதிகம்’’ என்கிறவர் பாம்புகளின் தன்மை களையும், சுபாவங்களையும் பட்டியலிடுகிறார்.
‘‘நாகப்பாம்புகள் அதிகபட்சமாக ஐந்தரை அடி நீளம் வரை இருக்கும். ராஜ நாகம் என்பது மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், கேரளாவிலும் அதிகம் உள்ளன. இந்த பாம்புகள் தனது இனத்தையே உணவாக உட்கொள்ளும். 18 அடி நீளம் வரை இருக்கும். இவை பெரும்பாலும் மனிதர்கள் வசிக்கும் இடத்துக்கு வராது. கேரளாவில் வனப்பகுதிகளில் வீடுகள், தோட்டங்கள் இருப்பதால் அங்கு தஞ்சமடைந்து விடும். கோவையில் சிறுவாணி பகுதியில் இந்த பாம்புகள் அதிகம் உள்ளன. இவை குளிர்ச்சியை அதிகளவில் விரும்பும்.
பாம்புகள் நாகமாணிக்கத்தை கக்கிவிட்டு இரைதேடும் என்பது மூடநம்பிக்கை. அவற்றின் ஆயுட்காலம் 14 ஆண்டுகள். பாம்புகளை வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும். மேலும் பாம்புகளை அனுமதி இல்லாமல் பிடிப்பதும், அடைத்து வைத்திருப்பதும் சட்டப்படி தவறு. நாகப்பாம்புகளை அடர்ந்த வனப்பகுதியில் விடும்போது அவற்றால் வாழ முடியாது. அவைகள் வீடுகள், தோட்டங்களில்தான் காணப்படும். அங்குதான் அதற்குரிய உணவான எலி, தவளைகள் காணப்படும் என்பதால் அவைகள் வனத்துக்குள் இருப்பதில்லை. பாம்புகளை பிடிப்பதற்கு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே முயற்சிக்க வேண்டும்.
பாம்புகளுக்கு காதுகள் கிடையாது. மகுடி ஊதினால் மயங்காது. ஆனால் அதிர்வுகளை உணர்ந்து கொள்ளும். அதன் கண்கள் 90 டிகிரி பார்வை கோணத்தில் சுழலும். நம்முடைய ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனிக்கும் ஆற்றல் கொண்டது. நிறைய பேர் அறியாமையால் பாம்புகளை அடிக்க முற்பட்டு, கடி வாங்கி இறக்கின்றனர். பாம்புகள் மனிதர்களை தேடி போய் கடிப்பதில்லை. அவை நமக்கு உதவி தான் செய்து வருகின்றன. வயல் வெளிகளில் நெற்பயிர்களை திருடும் எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது பாம்புகள் தான்" என்கிறார், சந்தோஷ்குமார்.
``திருச்சி பகுதிகளில் பிடிபடும் பாம்புகளை தங்கள் விளை நிலங்களில் விடுமாறு வனத்துறையிருக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். எலிகளால் 50 சதவீதத்துக்கும் மேல் விளை நிலங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. 1000 மண்புழுக்கள் செய்யும் வேலையை ஒரு மண்ணுளி பாம்பு செய்து விடும். இது தவிர அதன் கழிவுகள், எச்சங்களும் மண்ணின் வளத்துக்கு நன்மை பயக்கும். தற்போது கோவையிலும் விவசாயிகளிடையே பாம்புகள் குறித்து விழிப்புணர்வு பரவி வருகிறது. மாணவ- மாணவிகளிடமும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. விரும்புகிறவர்களுக்கு பாம்பு பிடிக்கும் முறை பற்றியும் கற்றுத்தருகிறோம்”