பணத்திற்காக சிறுவனை கடத்திய வாலிபருக்கு ஆயுள் தண்டனை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு

புனேயில் பணத்திற்காக சிறுவனை கடத்திய வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-01-06 22:15 GMT

புனே,

புனேயில் பணத்திற்காக சிறுவனை கடத்திய வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சிறுவன் கடத்தல்

புனே லவாலே பகுதியை சேர்ந்தவர் சஞ்சய். இவரும் சோலாப்பூரை சேர்ந்த சுகாஸ் (வயது 32) என்பவரும் சேர்ந்து கடந்த 2008–ம் ஆண்டு ஜூலை 18–ந் தேதி புனேயை சேர்ந்த 12 வயது சிறுவனை கடத்தி சென்றனர். அவனை திரும்ப ஒப்படைக்க ரூ.10 லட்சம் கேட்டு அவரது தந்தைக்கு மிரட்டல் விடுத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை மீட்டு, சஞ்சய் மற்றும் சுகாசை கைது செய்தனர். இதில் ஜாமீனில் வெளியே வந்த சஞ்சய் தலைமறைவானார். அவரை போலீசாரால் பிடிக்க முடியவில்லை.

ஆயுள் தண்டனை

இந்தநிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை புனே செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் வழக்கை விசாரித்த நீதிபதி சிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய சுகாசுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார். தலைமறைவாக உள்ள சஞ்சய் மீதான வழக்கு விசாரணை தனியாக நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்