தனியார் நிறுவன முன்பதிவு மையத்தை மூட வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள் தற்கொலை மிரட்டல்
தஞ்சையில் தனியார் நிறுவன முன்பதிவு மையத்தை மூட வலியுறுத்தி 100 அடி உயர இரும்பு தூண் மீது ஏறி ஆட்டோ டிரைவர்கள் தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை ரெயில் நிலையம் பகுதியில் தனியார் நிறுவன ஆட்டோ, கார், வேன்களை முன்பதிவு செய்ய மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் கடந்த 4 நாட்களுக்கு முன்பு செயல்பாட்டிற்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டபோது ரெயில் நிலைய ஆட்டோ, கார், வேன் டிரைவர்கள் சங்க கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
நேற்றுகாலை திடீரென முன்பதிவு மையம் செயல்பட தொடங்கியது. இதனால் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் கார் டிரைவர்கள் தஞ்சை ரெயிலடியில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் விளம்பர பதாகை வைப்பதற்காக 100 அடி உயர இரும்பு தூண் வைக்கப்பட்டுள்ளது. அந்த தூண் மீது ஆட்டோ டிரைவர் வீரமணி வேகமாக ஏறி மேலே சென்று அமர்ந்து கொண்டு கீழே குதித்துவிடுவமாக தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவரை பார்த்த மற்ற டிரைவர்கள் 3 பேரும் தூண் மீது ஏறி மிரட்டினர்.
ஆனால் அவர்களை கீழே இறங்கிவிடுங்கள் என்று சக டிரைவர்கள் கூறியதை தொடர்ந்து 3 பேர் மட்டுமே கீழே இறங்கினர். வீரமணி இறங்க மறுத்துவிட்டார். இதை அறிந்த நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆட்டோ டிரைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் முன்பதிவு மையத்தை அகற்றினால் தான் போராட்டத்தை கைவிடுவதாக உறுதிபட தெரிவித்தனர். இந்தநிலையில் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் அதிகாரிகளும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எனது கவனத்திற்கு எதுவும் கொண்டு வராமல், இப்படி தற்கொலை செய்வதாக தூண் மீது ஏறுவது எந்த வகையில் நியாயம். அவர் தவறி விழுந்துவிட்டால் அவரது குடும்பத்தை யார் பார்த்து கொள்வார்கள் என்று சுரேஷ் தெரிவித்தார். நாங்கள் ஏற்கனவே கலெக்டரிடம் மனு கொடுத்து இருக்கிறோம். உங்களிடம் கொடுக்க வந்தோம். நீங்கள் இல்லாததால் அலுவலக உதவியாளரிடம் கொடுத்துவிட்டு வந்தோம் என்று டிரைவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து தனியார் நிறுவன ஊழியர்களை அழைத்து வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் விசாரணை நடத்தியபோது, திருச்சி, ஸ்ரீரங்கம் போன்ற இடங்களில் முன்பதிவு மையம் வைத்து இருக்கிறோம். தஞ்சையில் 1 மாதத்திற்கு முன்பே வைக்க வேண்டும். ஆனால் சில பிரச்சினையால் தற்போது தொடங்கி இருக்கிறோம். எங்களால் இவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டிரைவர்கள், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் முன்பதிவு மையம் அமைப்பது எங்கள் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கு சமம். முன்பதிவு மையத்தை மூட வேண்டும் என்றனர்.
இரு தரப்பு கருத்தையும் கேட்டறிந்த அவர், நாளை(திங்கட்கிழமை) அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும். அதில் இரு தரப்பினரும் பங்கேற்று தங்கள் கருத்தை தெரிவிக்கலாம். மத்தியஅரசு அனுமதி எப்படி கொடுத்து இருக்கிறது என்பதை ஆய்வு செய்து முடிவு எடுப்போம். அதுவரை முன்பதிவு மையம் மூடப்படும் என்றார். அதன்படி முன்பதிவு மையம் மூடப்பட்டது. இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். இரும்பு தூண் மீது ஏறிய வீரமணி கீழே இறங்கி வந்தார். காலை 11.30 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடைந்தது.