நடத்தையில் சந்தேகம்: தனியார் பள்ளி ஆசிரியை கொலை காதல் கணவருக்கு போலீஸ் வலைவீச்சு
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தனியார் பள்ளி ஆசிரியையை கழுத்தை அறுத்துக் கொலை செய்த அவருடைய காதல் கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோலார் தங்கவயல்,
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தனியார் பள்ளி ஆசிரியையை கழுத்தை அறுத்துக் கொலை செய்த அவருடைய காதல் கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல் திருமணம்
கோலார் மாவட்டம் பங்காருபேட்டை டவுன் அமராவதி நகரை சேர்ந்தவர் வம்சி (வயது 30). இவர் அந்தப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சந்தியா (26). இவரும் அந்தப்பகுதியில் உள்ள மற்றொரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
இவர்கள் 2 பேரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் வம்சி, சந்தியாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடிக்கடி அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.
கழுத்தை அறுத்துக் கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் வம்சி, சந்தியாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அந்த சமயத்தில் திடீரென்று ஆத்திரமடைந்த வம்சி, வீட்டில் இருந்து கத்தியை எடுத்து சந்தியாவின் கழுத்தை அறுத்தார். இதில், சந்தியா ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வம்சி, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் நேற்று காலை அதேப்பகுதியில் வசிக்கும் சந்தியாவின் தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது, வீடு திறந்து கிடந்தது. அவர் உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் சந்தியா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், சந்தியாவின் உடலை பார்த்து கதறி அழுதார்.
வலைவீச்சு
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பங்காருபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சந்தியாவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை, வம்சி கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து பங்காருபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வம்சியை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.