ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் கி.வீரமணி பேட்டி
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்று தஞ்சையில் கி.வீரமணி கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த வல்லத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வல்லத்தில் நடந்த உலக நாத்திகர்கள் மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள உலக பகுத்தறிவாளர்கள் கலந்து கொண்டு ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளனர். மதவெறி நீங்கி மனிதநேயம் தழைக்க, சாதிகள் ஒழிய இந்த மாநாடு திருப்பமாக அமையும். பக்தியை கருவியாக கொண்டு இந்துத்துவா செயல்படுகிறது. இது டாஸ்மாக் போதை மாதிரி தான். இந்த பழக்கத்தில் இருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும். அரசியலுக்கு வருவது பற்றி ரஜனிகாந்த் முடிவு எடுக்க 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. தேர்தல் நேரத்தில் வருவதாக சொல்லி இருக்கிறார். அதற்கு பல ஆண்டுகள் ஆகும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலக நாத்திகர்கள் மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். பெரியார் வணிக தொழில்நுட்ப காப்பக முதன்மை செயல் அலுவலர் தேவதாஸ் வரவேற்றார்.
மாநாட்டில் கி.வீரமணி பேசியதாவது:-
மனிதன் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்று பெரியார், கல்வி நிறுவனங்களை தொடங்கினார். ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களுக்கு கல்வி வழங்க வேண்டும் என்பது பெரியாரின் நோக்கம். பெண்கள் கல்வி கற்றால் சமூகபுரட்சி நிகழும் என்று தான் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். புரா திட்டத்தின் மூலம் 67 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்து கொண்டால் வாழ்வில் வெற்றி பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநாட்டில் பகவத்கீதை மொழி பெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டது. நூலை வெளியிட்ட ஆசிரியர்கள் பழனிஅரங்கசாமி, கணேஷ்வரசாகோர் ஆகியோரை பாராட்டி கி.வீரமணி பொன்னாடை அணிவித்தார். மாநாட்டில் அமெரிக்காவை சேர்ந்த லட்சுமன்தமிழ், லண்டனை சேர்ந்த கேரிமெக்லண்ட், எலிசபெத் ஓகேசி, ஆந்திராவை சேர்ந்த விஜயன், பெல்ஜியத்தை சேர்ந்த ரஷ்டம்சீஸ், துணைவேந்தர் சுந்தரமனோகரன், பதிவாளர் தனராஜ் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.