பெரம்பலூர் மாவட்டங்களில் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்தம்
பெரம்பலூர் மாவட்டங்களில் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்த பேராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாற்று டிரைவர்களை கொண்டு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
பெரம்பலூர்,
தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழக ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் இருந்து 2.57 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் வைத்த கோரிக்கையை அதிகாரிகள் ஏற்காததால் சென்னையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் கடந்த 4-ந்தேதி இரவிலிருந்து தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று அரியலூர் கல்லங் குறிச்சி சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக கிளை பணிமனையில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்தத்தை தொடர்ந்தனர். தினசரி கூலி அடிப்படையில் கனரக வாகனங்களை ஓட்டி வருபவர்கள், கல்விநிறுவன டிரைவர்கள் உள்ளிட்டோரை வைத்து அரசு புறநகர் பஸ்கள், நகர பஸ்களை பணிமனை நிர்வாக அதிகாரிகள் இயக்கினர்.
அரியலூர் பணிமனையில் இருந்த 86 பஸ்களில் 35 பஸ்கள் இயங்கின. தஞ்சை, திருச்சி, கும்பகோணம், பெரம்பலூர், திட்டக்குடி, கடலூர், சிதம்பரம், சேலம் உள்ளிட்ட பக்கத்து ஊர்களுக்கும் பஸ் போக்குவரத்து நடந்தது. இதைத்தவிர தனியார் பஸ்கள், மினிபஸ்கள், அரசு நகர பஸ்கள் உள்ளிட்டவையும் கிராம பகுதிகளுக்கு இயங்கின. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், கூலித்தொழிலாளிகள் உள்ளிட்டோர் சிரமமின்றி போக்கு வரத்தை மேற்கொள்ள முடிந்தது. எனினும் குறித்த நேரத்தில் பஸ்கள் வராததால் காய்கறிகள், பழங்கள், விவசாய பொருட்கள் உள்ளிட்டவற்றை தினசரி விற்பனைக்காக அரியலூர் தினசரி காய்கறி சந்தைக்கு கொண்டுவருவதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்ததோடு தினசரி காய்கறி சந்தைக்கு வரத்து குறைந்தது. பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி முடிந்ததும் சிரமம் இன்றி வீட்டிற்கு செல்லும் வகையில் அரியலூர் பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் தனியாக நகர பஸ்கள் நிறுத்தப்பட்டு அவர்களை ஏற்றி சென்றனர்.
3-வது நாளாக நேற்று அரியலூர் ரெயில் நிலையத்தில் முன்பதிவில்லாமல் பயணம் செய்யும் அரியலூர்-சென்னை வழித்தடத்தில் செல்லும் ரெயில்களிலும், அரியலூர்-நெல்லை வழித்தடத்தில் சென்ற ரெயில்களிலும் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதைதவிர கடலூர், மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட பயணிகள் ரெயில்களிலும் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அரியலூர் ரெயில்வே போலீசார், ரெயில் நிலையத்தில் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்தனர்.
ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்துக்கழக கிளை பணிமனையில் இருந்து 65 சதவீத நகர மற்றும் புறநகர் பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் மாற்று டிரைவர்கள் மூலம் பஸ்சை இயக்குவதற்கான பணிகளை மும்முரமாக செய்து வருகின்றனர். இதற்கிடையே அரியலூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பஸ்கள் இயக்கம் குறித்து பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர் களிடம் கூறுகையில், 100 சதவீதம் அரசு பஸ்கள் இயங்க அரியலூர் மாவட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு ஏற்படாத வகையில் மாற்று டிரைவர்களை கொண்டு இயக்கப்படுகிறது என்று கூறினார். வேலைநிறுத்த போராட்டத்தை அறிந்த பெரும்பாலானோர் நேற்று போக்குவரத்தை மேற்கொள்ள ஜெயங்கொண்டம் பஸ்நிலையத்திற்கு வராததால் அது வெறிச்சோடி காணப்பட்டது.
இதே போல் பெரம்பலூர் துறைமங்கலம் அரசு போக்குவரத்துக்கழக கிளை பணிமனையிலும் நேற்று 3-வது நாளாக டிரைவர்கள், கண்டக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மாற்று டிரைவர்கள் மூலம் காலையிலிருந்தே அங்கிருந்து பஸ்களை வெளியே எடுத்து இயக்கினர். மொத்தம் உள்ள 105 பஸ்களில் 80-க்கும் மேற்பட்டவை இயக்கத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவினை குறிப்பிட்டு போக்குவரத்துக்கழகம் சார்பில் அங்கு பதாகை தொங்கவிட பட்டிருந்தது. அதில் சிலரது தூண்டுதலின் பேரில் பொதுசேவை தடைபடும் வகையில் வேலைநிறுத்தம் செய்பவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டிருந்தனர்.
பெரம்பலூர் பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் உள்ளிட்டவற்றிலிருந்து பெரும்பாலான அரசு பஸ்கள் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராம பகுதிகளுக்கும் சென்றன. எனினும் குறித்த நேரத்திற்கு செல்லாததால் மக்கள் வெளிஇடங்களுக்கு வேலைக்கு செல்ல முடியாமல் தவித்தனர். திருச்சி, தஞ்சை, துறையூர், அரியலூர், சேலம் ஆத்தூர் உள்ளிட்ட பக்கத்து ஊர்களுக்கு பஸ் இயக்கம் இருந்தது. ஆனால் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரடி பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மக்கள் திருச்சிக்கு சென்று ரெயில் மூலமாகவும், தனியார் டூரிஸ்ட் பஸ்களிலும் சென்றனர். மாற்று டிரைவர்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது. எனினும் வியாபாரத்திற்காக பொருட்களை பஸ்சில் எடுத்து செல்வதில் பாதிப்புகள் இருக்க தான் செய்தது. மேலும் கல்வீச்சு சம்பவம் உள்ளிட்ட அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.