ஈரோட்டில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.;
ஈரோடு,
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஏ.செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ரா.மயில்துரையன், பொருளாளர் ஏ.ராமுதேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
மதுரை விமான நிலையத்துக்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயர் சூட்ட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் வக்கீல் மாமள்ளர், மாநகர் இணைச்செயலாளர்கள் பூபதி, குணசேகரன், துரைசாமி, லோகநாதன், ஈஸ்வரன், மகளிர் அணி பொறுப்பாளர்கள் சத்யா, அன்னக்கொடி, நித்யா மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.