தொடர் திருட்டு: டிப்ளமோ படித்த வாலிபர் கைது 15 இருசக்கர வாகனங்கள் மீட்பு
தலைவாசல் பகுதியில் தொடர் திருட்டு: டிப்ளமோ படித்த வாலிபர் கைது 15 இருசக்கர வாகனங்கள் மீட்பு
தலைவாசல்,
சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல் பகுதிகளில் மொபட் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் தொடர்ந்து திருட்டுப்போய் வந்தன. இதனால் போலீசார் தனிப்படை அமைத்து இருசக்கர வாகன திருடனை தேடி வந்தார்கள்.
இந்த நிலையில் தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல்பாண்டியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், அமிர்தவேல் மற்றும் போலீசார் நேற்று காலை தலைவாசல் அடுத்த மும்முடி பிரிவு அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மொபட்டில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் அவர், தலைவாசல் அருகே மணிவிழுந்தான் ஊராட்சி ராமசேஷபுரம் கிராமத்தில் உள்ள காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த வேலுமணி (வயது 23) என்பது தெரியவந்தது. டிப்ளமோ படித்த இவர் வேலை கிடைக்காததால் ஆத்தூர், தலைவாசல் பகுதிகளில் வீடு மற்றும் கடைகள் முன்பு நிறுத்தியிருந்த மொபட், மோட்டார்சைக்கிள்களை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் தனிப்படை போலீசார் இருசக்கர வாகனங்கள் திருட்டு புகார்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து வேலுமணியை கைது செய்தனர். மேலும், அவர் கொடுத்த தகவலின்பேரில் 12 மொபட்டுகள், 3 மோட்டார் சைக்கிள்கள் என மொத்தம் 15 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன.