தற்காலிக டிரைவர்களை கொண்டு இயக்கியதால் அரசு பஸ் டயரில் காற்றை பிடுங்கி விட்ட மர்மநபர்கள்

வேலை நிறுத்தம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பஸ்களை தற்காலிக டிரைவர்களே ஓட்டினர்.

Update: 2018-01-06 22:15 GMT

ஊட்டி,

வேலை நிறுத்தம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பஸ்களை தற்காலிக டிரைவர்களே ஓட்டினர். இந்த நிலையில் கோத்தகிரி பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 10 பஸ்களின் டயர்களின் காற்றை யாரோ மர்ம நபர்கள் பிடுங்கி விட்டு விட்டனர். அத்துடன் அவை சேதப்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் நேற்று பணிக்கு வந்த தற்காலிக டிரைவர்கள், வேறு டயர்களை மாற்றி பஸ்களை இயக்கினர்.

ஊட்டி பஸ் நிலையத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் வைக்கப்பட்டு இருந்த அறிவிப்பு பலகையில், ‘வேலைநிறுத்தம் தொழிலாளர் உரிமை. இதற்கு அரசோ அல்லது நீதிமன்றமோ தடை விதிக்க முடியாது. அரசு மற்றும் நீதிமன்றத்தின் மிரட்டல் நியாயமற்றது. அதற்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

கோவையை அடுத்த சூலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேற்றுமுன்தினம் டிரைவர் ஒருவர் தனது ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க வந்தார். அவர் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருந்தார்.

அந்த டிரைவரின் ஓட்டுனர் உரிமத்தை வாங்கி வைத்துக்கொண்ட பணியாளர்கள் அவரை ஒண்டிப்புதூர் பஸ் பணிமனைக்கு சென்று கிளை மேலாளரை சந்திக்குமாறு கூறினார்கள். அதன்பேரில் அங்கு சென்ற டிரைவருக்கு அரசு பஸ்சை ஓட்டும் பணி வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்