போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 3-வது நாளாக தொடர் வேலைநிறுத்தம்
தர்மபுரி மாவட்டத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நேற்று 3-வது நாளாக தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பணிமனைகளில் ஆய்வு நடத்திய அமைச்சர் கே.பி.அன்பழகன் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் 13 தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 3-வது நாளாக தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் கணிசமான பஸ்கள் இயங்கவில்லை. தர்மபுரி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் அரசு பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டன.
அரசு டவுன் பஸ்கள் ஆங்காங்கே இயக்கப்பட்டன. பெரும்பாலான பஸ்கள் அரசு போக்குவரத்துகழக பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அரசு பஸ்களின் இயக்கம் குறைவாக இருந்ததால் தர்மபுரியில் இருந்து வெளியூர்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து தர்மபுரிக்கு வேலைக்கு வருபவர்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
அரூரில் உள்ள பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்களை இயக்க வேண்டும் என்று அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் அந்த பகுதிக்கு திரண்டனர். பஸ்களை இயக்க எதிர்ப்பு தெரிவித்து தொ.மு.ச. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களும் அங்கு திரண்டனர். அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த அரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர்.
இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தர்மபுரி பஸ்நிலையம், புறநகர் பஸ்நிலையம், பாரதிபுரம், காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், அரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு போக்குவரத்துகழக பணிமனைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களில் கணிசமான பஸ்களை மாற்று டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மூலம் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் கலெக்டர் விவேகானந்தன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் ஊதிய உயர்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பல்வேறு நபர்களின் தூண்டுதலால் வேலைநிறுத்தபோராட்டம் நடத்தப்படுகிறது.
தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்து உள்ளோம். மாலை நிலவரப்படி 80 சதவீத அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்களை இயக்க தற்காலிகமாக தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.