சாலை போக்குவரத்து மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்

சாலை போக்குவரத்து மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நாகர்கோவிலில் சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்;

Update: 2018-01-06 22:45 GMT
நாகர்கோவில்,

சாலை போக்குவரத்து மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும், சாதாரண காரணங்களுக்காக ஓட்டுனர் உரிமத்தை பறிக்கக் கூடாது, இன்சூரன்ஸ்– வரி உள்ளிட்ட கட்டணங்களை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்க்களை வலியுறுத்தி குமரி மாவட்ட மோட்டார் ஒர்க்கர்ஸ் யூனியன் (சி.ஐ.டி.யு.) சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க பொருளாளர் ஆசீர் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு, மாவட்ட செயலாளர் தங்கமோகன் தொடக்க உரையாற்றினார். நிர்வாகிகள் மனோகரன், பிரேமானந்த், சின்னன்பிள்ளை, லெட்சுமணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் ஐடாஹெலன், நிர்வாகிகள் சந்திரபோஸ், அந்தோணி, வக்கீல் மரிய ஸ்டீபன் மற்றும் பலர் வாழ்த்தி பேசினார்கள். சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் பொன்.சோபனராஜ் நிறைவுரையாற்றினார். இதில் சிவநாராயணன், விக்டர் ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்