உறக்கத்துக்கு உதவும் ‘ரோபோ’

மனித வாழ்வில் உறக்கம் மிக முக்கியமானது. போதிய உறக்கம் இல்லாவிட்டால் பல உடல்நல பாதிப்புகள் ஏற்படும்.

Update: 2018-01-06 09:00 GMT
நம் வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை உறக்கத்துக்காகச் செலவழிக்கிறோம். உலகில் பலர் இரவில் சரியான உறக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். 5 பேரில் ஒருவர் நிம்மதியான இரவுத் தூக்கமின்றி உள்ளனர்.

இந்நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில் நெதர்லாந்தைச் சேர்ந்த ரோபோவியல் மாணவர்கள் ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளனர். தலையணை போன்று இருக்கும் இந்த ரோபோ, தூக்கம் வராதவர் களுக்கு விரைவான, நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ரோபோவை அருகில் வைத்துப் படுக்கும்போது இதில் இருந்து வரும் சத்தம், தூக்கத்தை வர வைக்கும். இதில் உள்ள ஒலிப்பதிவுக் கருவியில் இதயத்துடிப்பு, மனதுக்கு அமைதி தரும் இசை, மெல்லிசை அல்லது நமக்குப் பிடித்தவர்களின் குரலைப் பதிவேற்றம் செய்து வைக்கலாம். பின்னர் நாம் உறங்கும் வேளையில் கேட்கலாம்.

அது நம் மனதை அமைதியாக்கி, தூக்கத்தை வரவழைக்கும். தூங்கியபிறகு அந்த இசை தானாக நின்று விடும்.

இந்த ரோபோவின் முக்கிய நோக்கம், 2025-ம் ஆண்டுக்குள், உலகம் முழுக்க உறக்கமின்றித் தவிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தை அளிப்பது தான் என்று இதைத் தயாரித்தவர்கள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்