தண்டவாளத்தை கடக்க முயன்ற போலீஸ்காரர் ரெயிலில் அடிபட்டு சாவு
தண்டவாளத்தை கடக்க முயன்ற போலீஸ்காரர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
தானே,

போலீஸ்காரர்
மும்பை குர்லா ரெயில்வே போலீசில் போலீஸ்காரராக இருந்து வந்தவர் கிரிஷ் (வயது40). இவர் சம்பவத்தன்று பணி முடிந்து கல்யாணில் உள்ள வீட்டிற்கு மின்சார ரெயிலில் சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு செல்வதற்காக தாக்குர்லி-கல்யாண் ரெயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மின்சார ரெயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இதை கிரிஷ் கவனிக்கவில்லை.
ரெயிலில் அடிபட்டு சாவு
இதனால் கண்இமைக்கும் நேரத்தில் அந்த மின்சார ரெயில் அவர் மீது மோதி சென்றது. இதில் கிரிஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதுபற்றி அந்த ரெயிலை ஓட்டி சென்ற மோட்டார்மேன் ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த கிரிசை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக கூறினர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.