பயந்தரில் பள்ளி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் கைது திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரம்
பயந்தரில் பள்ளி மாணவியை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர். மாணவி திருமணத்திற்கு மறுத்ததால் குத்தியதாக அவர் தெரிவித்து உள்ளார்.
மும்பை,
பயந்தரில் பள்ளி மாணவியை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர். மாணவி திருமணத்திற்கு மறுத்ததால் குத்தியதாக அவர் தெரிவித்து உள்ளார்.
மாணவிக்கு கத்திக்குத்துதானே மாவட்டம் பயந்தர் மேற்கு ஜெய் அம்பே நகரில் வசித்து வரும் 14 வயது மாணவியை கடந்த புதன்கிழமை அவளது தாய் பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஜைசல்பார்க் சுரங்கப்பாதையில் சென்று கொண்டிருந்த போது, அங்கு கத்தியுடன் வந்த வினோத் (வயது23) என்ற வாலிபர் மாணவியின் தாயை கீழே தள்ளி விட்டு மாணவியை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு ஓடி விட்டார்.
இதில் மாணவி படுகாயம் அடைந்தாள். அவள் சிகிச்சைக்காக காந்திவிலி சதாப்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அங்கு டாக்டர்கள் அவளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வாலிபர் கைதுசம்பவம் குறித்து பயந்தர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த வினோத்தை கைது செய்தனர்.
கைதான வினோத் மாணவியை கடந்த ஒரு வருடமாக பின் தொடர்ந்து சென்று காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கும்படி வற்புறுத்தி வந்தார். இதனால் பயந்து போன மாணவி தனது பெற்றோரிடம் கூறினாள். இது வினோத்துக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மாணவியை கத்தியால் குத்தியதாக அவர் போலீஸ் விசாரணையில் தெரிவித்து உள்ளார். அவர் மீது போலீசார் கொலை முயற்சி மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் ஒப்படைத்தனர்.