கோயம்பேட்டில் இருந்து ஒரே நாள் இரவில் ஆயிரம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம்

பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு பயணிகள் படையெடுத்தனர்.

Update: 2018-01-05 23:45 GMT
பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் நேற்று முன்தினம் மாலை திடீரென்று அறிவிக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் பதற்றம் அடைந்தனர். குறிப்பாக கோயம்பேட்டில் இருந்து நகரின் பல்வேறு இடங்களுக்கு செல்ல காத்திருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து பஸ் நிலைய வளாகத்தில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு பயணிகள் படையெடுத்தனர். மெட்ரோ ரெயில் மூலம் பயணம் செய்தனர்.

வழக்கமாக மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான நேரத்தில் அதிகபட்சமாக 250 பேர் மட்டுமே, கோயம்பேடு மெட்ரோ ரெயில்நிலையத்துக்கு வருகை தருவார்கள். ஆனால் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் எதிரொலியாக நேற்று முன்தினம் இரவில் மட்டும், கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர்.

இந்தநிலை நேற்றும் தொடர்ந்தது. நகரில் உள்ள பிற மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. மெட்ரோ ரெயில்களில் அதிக அளவில் பயணிகள் பயணம் செய்தனர். 

மேலும் செய்திகள்