கட்டப்பனை தபால் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டம்
கட்டப்பனை நகரில் உள்ள தபால் அலுவலகம் முன்பு சிறு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக தர்ணா போராட்டம் நடந்தது.
கட்டப்பனை,
கட்டப்பனை நகரில் உள்ள தபால் அலுவலகம் முன்பு சிறு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாநில தலைவர் ஸ்டீபன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியின் இடுக்கி மாவட்ட தலைவர் இப்ராகிம்குட்டி கல்லார் போராட்டத்தை தொடங்கி வைத்தார். விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.