பியர் அழகு நிலையம்
பராகுவே நாட்டில் பியர் மதுபானத்தை அடிப்படையாக கொண்டு, ஒரு அழகு நிலையம் தொடங்கப்பட்டிருக்கிறது.
பராகுவே நாட்டில் பியர் மதுபானத்தை அடிப்படையாக கொண்டு, ஒரு அழகு நிலையம் தொடங்கப்பட்டிருக்கிறது. குளிப்பது, முகத்தில் பேசியல் செய்வது, மெனிக்கியூர், பெடிகியூர் செய்வது, முடியை சுத்தப்படுத்துவது, துணி துவைப்பது... என அனைத்திற்கும் பியரை தான் பயன்படுத்துகிறார்கள். சோப்பு, ஷாம்பு, தண்ணீர், அழகு கிரீம்கள் என அனைத்திலும் பியர் பானத்தை கலந்திருப்பதால், இந்த அழகு நிலையம் வித்தியாசப்படுகிறது. மற்ற அழகு நிலையங்களை விட செலவு அதிகம் என்றாலும், பியர் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கிறதாம். அதனால் பியர் அழகு நிலையத்தில் கூட்டம் களைகட்டுகிறது.