சாதிக்க தூண்டும் விளையாட்டு
காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுவதும் விளையாட்டு என்பதை குழந்தைகள் வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என முழங்கியவர் மீசை கவிஞர் பாரதி.
இன்றோ, காலையும், மாலையும் படிக்க வேண்டும் என்று தான் குழந்தைகளுக்கு சொல்கிறோம். பழையகாலத்து விளையாட்டில் படிப்பும் மறைந்து இருப்பதை பலரும் மறந்துவிட்டனர். கோலி மற்றும் கில்லி விளையாடும்போது எண்ணிக்கை என்னும் கணித பாடத்தை படித்தார்கள். பம்பரம் விளையாடும் போது குறித்தவறாது இலக்கை எப்படி அடைய வேண்டும் என்று படித்தார்கள். இப்படி ஒவ்வொரு விளையாட்டும் ஏதோ ஒரு படிப்பை கற்று கொடுத்தது.
இன்று நீங்கள் அறிவாளியாக பார்க்கும் ஒவ்வொருவருக்கு பின்னால் படிப்பு மட்டும் உள்ளது என்று கூறினால் அது உங்கள் அறியாமையே! அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் பழக்கம் படிப்பதினால் மட்டும் வருவதில்லை. அந்த பழக்கம் அதிகமாக விளையாடும்போதுதான் வெளிவருகிறது. குழந்தைகள் விளையாடும்போதுதான் சுயமாக முடிவு எடுக்கும் திறமை வளர்கிறது. அவர்களின் வாழ்வை தீர்மானிக்கும் பெரும் பகுதி விளையாட்டு மூலம் கிடைக்கிறது. பண்டைய கால கல்வி முறையில் விளையாட்டை ஒரு பாடமாக வைத்து இருந்தார்கள். இப்போது நம்முடைய கல்வி முறையிலும் உடற்கல்வி என்ற ஒரு பாடம் இருக்கிறது. இது பெயர் அளவில்தான் உள்ளது. இந்த வகுப்பறை நேரத்தில் வேறு பாடம் நடத்தி உடற்கல்வி பாடத்தின் முக்கியத்துவத்தை குறைத்து விட்டோம்.
நல்ல உடல் ஆரோக்கியம் இருந்தால் தான் ஒரு குழந்தையால் படிப்பில் கவனம் செலுத்த முடியும். பள்ளியில் படிப்பு முடிந்து வீடு வந்ததும் டியூசன், வீட்டுப்பாடம் என்று குழந்தையின் படிப்பில் கவனம் செலுத்தும் நாம் அவர்களின் பல்வேறு திறமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.
ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய குழந்தை மற்றும் இளமை பருவத்தை எண்ணி பார்த்தால், அப்போது விளையாடிய விளையாட்டுகள் தான் முதலில் கண்முன் உதிக்கும். நீங்கள் பெற்ற ஆரோக்கியமான விளையாட்டு நினைவுகளை உங்கள் குழந்தைகளும் பெற அனுமதியுங்கள். குழந்தைகள் சாதனை சிகரத்தை தொட விளையாட்டு ஒரு தூண்டுகோலாக அமையும் என்பது திண்ணம்.
-ரெக்சின் உமரி