முழுஅடைப்பின் போது, வன்முறை பேசிய பிஞ்சு உள்ளம் வீடியோ வெளியாகி பரபரப்பு

மராட்டியத்தில் நடந்த முழுஅடைப்பின் போது, தங்களுக்கு எதிரான சமூகத்தினரை தாக்க செல்வதாக கூறி கையில் கற்களுடன் வன்முறை வசனத்தை பேசியபடி சிறுவன் ஒருவன் செல்லும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-01-04 22:30 GMT

மும்பை,

மராட்டியத்தில் நடந்த முழுஅடைப்பின் போது, தங்களுக்கு எதிரான சமூகத்தினரை தாக்க செல்வதாக கூறி கையில் கற்களுடன் வன்முறை வசனத்தை பேசியபடி சிறுவன் ஒருவன் செல்லும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முழுஅடைப்பு

புனேயில் பீமா – கோரேகாவ் வன்முறை சம்பவத்தை கண்டித்து நேற்று முன்தினம் மராட்டியத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. முழுஅடைப்பு போராட்டத்தினால் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து அடியோடு முடக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாநிலமே ஸ்தம்பித்து போனது. வன்முறை சம்பவங்களும் நடந்தன.

இந்த நிலையில், முழுஅடைப்பின் போது, தங்களுக்கு எதிரான சமூகத்தினரை தாக்க செல்வதாக கூறிக் கொண்டு சுமார் 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தன் இரண்டு கைகளிலும் கற்களை தூக்கி கொண்டு செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறுவன் ஆவேச பதில்

இந்த காட்சியை படம் பிடித்தவர் அந்த சிறுவனிடம், யாரை தாக்குவதற்கு செல்கிறாய், யார் அவர்கள் என கேட்கிறார். அதற்கு அவன்‘மராத்தா சமுதாயத்தை சேர்ந்தவர்களை தாக்க செல்கிறேன்’ என்று ஆவேசமாக பதில் கூறியபடியே நடந்து செல்கிறான்.

மேலும் அந்த வீடியோ காட்சியில், தான் டாக்டர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்த புனே வந்திருந்ததாகவும் கூறுகிறான். பள்ளி பாடத்தை நினைவில் வைத்திருக்க வேண்டிய அந்த பிஞ்சு உள்ளம் வன்முறை வசனத்தை பேசி கொண்டு செல்லும் அந்த வீடியோ காட்சி பார்ப்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

மேலும் செய்திகள்