அரசு சார்பில் 100 சர்வதேச பள்ளிகள் தொடங்க திட்டம் மந்திரி வினோத் தாவ்டே தகவல்

மராட்டியத்தில் அரசு சார்பில் 100 சர்வதேச பள்ளிகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக மாநில கல்வித்துறை மந்திரி வினோத் தாவ்டே கூறியுள்ளார்.

Update: 2018-01-04 22:30 GMT

மும்பை,

மராட்டியத்தில் அரசு சார்பில் 100 சர்வதேச பள்ளிகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக மாநில கல்வித்துறை மந்திரி வினோத் தாவ்டே கூறியுள்ளார்.

சர்வதேச பள்ளிகள்

மராட்டியத்தில் அரசு பள்ளிகள் மாநில அரசின் பாடத்திட்டத்தின்படி செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகள் மாநில கல்வி வாரியத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் உலக தரத்திலான கல்வியை பெரும் வகையில் மாநிலத்தில் சர்வதேச பள்ளிகள் அரசு சார்பில் தொடங்கப்பட உள்ளன. இந்த பள்ளிகள் அடுத்த கல்வி ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் என கூறப்படுகிறது.

மாநில சர்வதேச கல்வி வாரியம்

இதுகுறித்து மாநில கல்வித்துறை மந்திரி வினோத் தாவ்டே கூறியதாவது:–

முதல் கட்டமாக 100 சர்வதேச பள்ளிகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இந்த பள்ளிகள் அரசு பள்ளிகளாகவே செயல்படும். இந்த பள்ளிகளை நிர்வகிக்க மாநில சர்வதேச கல்வி வாரியத்தையும் (எம்.ஐ.இ.பி.) தொடங்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சர்வதேச பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தை உருவாக்க கமிட்டி அமைக்கப்படும் என மூத்த கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் செய்திகள்