கொடைக்கானலில் பிளம்ஸ் மரங்களில் பூக்கள் பூக்க தொடங்கியது விவசாயிகள் மகிழ்ச்சி
கொடைக்கானலில் பிளம்ஸ் மரங்களில் பூக்கள் அதிக அளவு பூக்க தொடங்கி உள்ளது. இதனால் பிளம்ஸ் பழம் விளைச்சல் அதிகரிக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொடைக்கானல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அட்டுவம்பட்டி, வில்பட்டி, பள்ளங்கி, பேத்துப்பாறை, வடகவுஞ்சி, அடுக்கம் போன்ற பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பிளம்ஸ் மரங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பிளம்ஸ் பழ சீசன் தொடங்கி விற்பனைக்கு வந்து விடும். கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், பிளம்ஸ் பழ விளைச்சல் குறைந்தது. இதனால் கடந்த ஆண்டு பிளம்ஸ் பழம் கிலோ ரூ.100 முதல் ரூ.250 வரை விற்பனை ஆனது.
இந்த நிலையில் இந்த ஆண்டு கொடைக்கானலில் பிளம்ஸ் மரங்களில் தற்போது அதிக அளவு பூக்கள் பூத்து குலுங்குகின்றன. அவை மரங்களில் பூமாலை தொடுத்ததை போல் அழகாக காட்சி அளிக்கிறது. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
விளைச்சல் அதிகரிப்பு
இது குறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, கடந்த 2 ஆண்டுகளாக பிளம்ஸ் பழம் போதிய விளைச்சல் இல்லாததால் மிகவும் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அதிக அளவு பூக்கள் பூத்து உள்ளது. இதனால் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மகிழ்ச்சியாக உள்ளது, என்றனர்.