ரெயில்வே மேம்பாலத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது போக்குவரத்து பாதிப்பு

திருவெறும்பூர் ரெயில்வே மேம்பாலத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது போக்குவரத்து பாதிப்பு;

Update: 2018-01-04 22:30 GMT
திருவெறும்பூர்,

தஞ்சாவூரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது45). இவர் தனது காரில் திருச்சிக்கு ஒரு வேலை விஷயமாக வந்து விட்டு வேலை முடிந்து மீண்டும் தஞ்சைக்கு திரும்பி கொண்டிருந்தார். நேற்று காலை 11 மணியளவில் கார் திருவெறும்பூர் மேம்பால இறக்கத்தில் வந்த போது திடீரென காரின் என்ஜின் தீப்பற்றி எரிந்தது. இதனால் காரில் உள்ள சைலன்சரில் இருந்து குபுகுபுவென புகை வந்தது. உடனடியாக திருநாவுக்கரசு காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். இதை பார்த்ததும் அந்த காருக்கு பின்னால் வந்த வாகன ஓட்டிகள் பயந்து போய் தாங்கள் வந்த வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். சிலர் வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி ஓடினர். இதனை பார்த்த பொதுமக்கள் திருவெறும்பூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் மதன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அங்குள்ள வியாபாரிகள் துணையோடு காரில் உள்ள என்ஜின் தீயை அணைத்தனர். திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த பரபரப்பான சம்பவத்தால் சுமார் அரை மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்