வாகனம் மோதி சென்னை வாலிபர் பலி

சென்னை வில்லிவாக்கம் அன்னை சத்தியா நகரை சேர்ந்த வாலிபர் வாகனம் மோதி பலியானார்.

Update: 2018-01-04 22:00 GMT
தாம்பரம், 

சென்னை வில்லிவாக்கம் அன்னை சத்தியா நகரை சேர்ந்தவர் சுடலை என்கிற சுரேந்திரன் (வயது 20). இவர் சென்னையில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் பெங்களூரு நோக்கி சென்றார்.

காஞ்சீபுரம் அடுத்த வெள்ளைகேட் மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து வேலூர் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதிவிட்டு சென்றது.

உடனடியாக சுரேந்திரனை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்கைகாக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். 

மேலும் செய்திகள்