யானைகள் நலவாழ்வு முகாம் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் நேற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த கோவில் யானைகளுக்கான நலவாழ்வு முகாமை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மேட்டுப்பாளையம்,
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளுக்கான புத்துணர்வு முகாம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 10-வது ஆண்டாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பத்திரகாளியம்மன் கோவில் அருகே உள்ள தேக்கம் பட்டியில் நேற்று யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் தொடங்கியது. இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு கோவில்களை சேர்ந்த 26 யானைகளும், மடங்களுக்கு சொந்தமான 5 யானைகளும், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கோவில்களை சேர்ந்த 2 யானைகள் என மொத்தம் 33 யானைகள் பங்கேற்று உள்ளன.
நலவாழ்வு முகாமை முன்னிட்டு யானைகள் அனைத்தும் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஷவரில் குளிப்பாட்டுவதற்காக அதிகாலை முதல் அழைத்து செல்லப்பட்டன. யானைகள் குளித்து முடித்ததும், அந்தந்த கோவில்களின் பாரம்பரியப்படி அலங்கரிக்கப்பட்டன. இதனைதொடர்ந்து அனைத்து யானைகளும் தொடக்க விழா நடைபெறும் இடத்துக்கு அழைத்து வரப்பட்டன.
யானைகள் நலவாழ்வு முகாமை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று காலை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர். பின்னர் முகாமில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யானைகளுக்கு அமைச்சர்கள் ஆப்பிள், அன்னாசி பழம்,கரும்பு, கருப்பட்டி உள்ளிட்டவற்றை வழங்கினர். இதனை யானைகள் ருசித்து சாப்பிட்டன.
இந்த தொடக்க விழாவில் மாவட்ட கலெக்டர் ஹரிகரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் ஜெயா, எம்.எல்.ஏ.க்.கள் பி.ஆர்.ஜி. அருண் குமார், அம்மன் அர்ச்சுணன், ஓ.கே.சின்னராஜ், ஈஸ்வரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி, வன அதிகாரி சதீஷ், இந்து அறநிலையத்துறை தலைமையிடத்து இணை ஆணையர் ஹரிபிரியா, இணை ஆணையர்கள் பரஞ்சோதி, ஜெகநாதன், துணை ஆணையர்கள் பழனிக்குமார், க.ராமு, உதவி ஆணையர் விமலா, முகாம் மேற்பார்வையாளர் வெற்றிசெல்வன் உள்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த யானைகள் நலவாழ்வு முகாம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 20-ந்தேதி வரை மொத்தம் 48 நாட்கள் நடக்கின்றது. இதில் பங்கேற்று உள்ள யானைகள் குளிப்பதற்காக ஷவர்பாத் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரே நேரத்தில் 5 யானைகள் வரை குளிக்க முடியும். முகாமில் பங்கேற்றுள்ள யானைகளுக்கு கால்நடை துறை துணை இயக்குனர் சந்திரசேகரன் மற்றும் வனத்துறை கால்நடை டாக்டர் மனோகரன் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்கின்றனர்.இந்த முகாமில் பங்கேற்ற யானைகளின் பாகன்கள் தங்குவதற்கு தனி அறைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த யானைகள் முகாமை பார்வையிட பொதுமக்கள் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் முகாமில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புவேலியின் அருகே நின்று யானைகளை பார்க்க முடியும். மேலும் முகாமுக்கு உள்ளே செல்லவோ அல்லது யானைகளுக்கு அருகில் செல்லவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து இந்து அறநிலையத்துறை ஆணையாளர் ஜெயா கூறியதாவது:-
இந்த ஆண்டு நல வாழ்வு முகாமில் யானைகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. முகாமை சுற்றிலும் இந்த ஆண்டு தொங்கு மின்வேலிகள் 1,200 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளன. இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளே புக முடியாது. மேலும் முகாமை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. கால்நடை டாக்டர்களின் ஆலோசனைகளின் பேரில் யானைகளுக்கு உணவுகள் வழங்கப்படும். முகாமில் பங்கேற்ற பாகன்களுக்கு சான்றிதழ், அடையாள அட்டை மற்றும் சீருடை வழங்கப்படும்.யானைகள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், தண்ணீர் குடிக்கவும் தனி வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. உடல் நலம் குறைந்த யானைகளுக்கு டாக்டர்களின் அறிவுரையின் பேரில் கூடுதல் சத்து நிறைந்த உணவுகள் வழங்கப் படும். கோவில் யானைகள் தினமும் 2 நேரம் குளிக்க வைக்கப்படும். மேலும் நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 கிலோ மீட்டர் தூர நடைபயிற்சியும் அளிக்கப்படுகிறது. உடல் எடை அதிகரித்த யானைகளுக்கு டாக்டர்களின் ஆலோசனைகளின் பேரில் கூடுதல் நடை பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.