சங்கிலி பறிப்பு வழக்குகளில் ஜெயிலில் அடைக்கப்பட்ட வாலிபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
கோவையில் ஆள் கடத்தல் மற்றும் சங்கிலிபறிப்பு வழக்குகளில் ஜெயிலில் அடைக்கப்பட்ட வாலிபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கோவை,
கடந்த 3.11.2017 அன்று கோவை பீளமேடு பகுதியில் ஆள் கடத்தல் வழக்கு தொடர்பாக போத்தனூர் செட்டிப்பாளையம் கிருஷ்ணா நகரை சேர்ந்த பூபாலன்(வயது 24) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து ஆவாரம்பாளையம் ரோட்டில் கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கிலும் பூபாலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை போலீசார் தேடி வந்தனர்.
கைது
இந்த நிலையில் பூபாலனை போலீசார் கடந்த 22.1.2017 அன்று கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டியில் வைத்து கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பூபாலன் மீது ஆர்.எஸ்.புரம், குனியமுத்தூர், செட்டிப்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் தங்க சங்கிலி பறித்தது, இரு சக்கர வாகனங்கள் திருடிய வழக்கு கள் இருப்பது தெரியவந்தது.
சிறையில் அடைப்பு
இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக கோவை மாநகரம், கோவை மாவட்டப் பகுதிகளில் தங்க சங்கிலி பறிப்பு, இரு சக்கர வாகனங்கள் திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதைதொடந்து வாலிபர் பூபாலன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யாவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதை ஏற்று அதன்படி நடவடிக்கை எடுக்க கமிஷனர் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பூபாலனிடம் வழங்கப்பட்டது.இதனால் பூ பாலன் ஒரு வருடத்துக்கு ஜாமீனில் வெளியேவர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.