பனிச்சறுக்கு வண்டியில் பீட்சா டெலிவரி
வியாபாரத்தில் பல புதுமையான முயற்சிகளைக் கையாளும் டொமினோஸ் பீட்சா நிறுவனம், இந்த ஆண்டும் ஒரு புது உத்தியை அறிமுகப்படுத்தியுள்ளது.
வியாபாரத்தில் பல புதுமையான முயற்சிகளைக் கையாளும் டொமினோஸ் பீட்சா நிறுவனம், இந்த ஆண்டும் ஒரு புது உத்தியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜப்பானில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட கடும் குளிர் நிலவுகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டைத் தொடர்ந்து ஜனவரி மாதம் வரை கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் பண்டிகை கொண்டாட்டங்களின் போது, வாடிக்கையாளர்களுக்கு பீட்சா டெலிவரியில் தாமதம் ஏற்படலாம் எனக் கருதியது டொமினோஸ் பீட்சா நிறுவனம். அந்த தாமதத்தை தவிர்க்க ஒரு வித்தியாசமான முயற்சியில் அந்த நிறுவனம் இறங்கியது. அதன்படி பனிக்காலம் முடியும் வரை, பனிச்சறுக்கு வண்டிகளை கொண்டு, பீட்சா டெலிவரி செய்து வரு கிறார்கள்.
பெரிய கொம்புகள் கொண்ட கலைமான்கள், பயிற்சி பெற்ற நாய்கள் என பனிப்பிரதேசங்களுக்கு பழக்கமான விலங்குகளை, பனிச்சறுக்கு வண்டிகளை இழுக்கப் பயன்படுத்துகிறார்கள். விலங்குகளின் உடலில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதால், பீட்சாவையும், பனிச்சறுக்கு வண்டியையும் டிராக் செய்ய முடியுமாம். இதை வித்தியாசமான ஏற்பாடு எனச் சிலர் பாராட்டினாலும், மான்களை வதை செய்வதாகச் சிலர் எதிர்ப்புக் குரல் காட்டியுள்ளனர்.