நலவாரிய அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சேலம் கோரிமேடு நலவாரிய அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பேச்சுவார்த்தையின்போது, மாதந்தோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என்று அதிகாரி உறுதி அளித்தார்.
சேலம்,
தொழிலாளர் நலன் காக்க வேண்டும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களுக்கு நிதி வழங்க வேண்டும், 3 ஆயிரம் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் உடனே வழங்கப்பட வேண்டும், தொழிலாளர் அலுவலரை நியமனம் செய்ய வேண்டும், அனைத்து வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பதிவு, புதுப்பித்தல், கேட்புமனு ஆகிய விண்ணப்பங்களை பெற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சேலம் கோரிமேட்டில் உள்ள நலவாரிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் முனுசாமி, மாவட்ட செயலாளர் விமலன், எச்.எம்.எஸ். மாநில துணைத்தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஐ.என்.டி.யு.சி. மாவட்ட துணைத்தலைவர் நடராஜன், எல்.பி.எப். மாவட்ட நிர்வாகி டேவிட். ஏ.ஐ.சி.சி.டி.யு. நிர்வாகி வேல்முருகன் உள்பட தொழிலாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. மேலும் தீர்வு காணப்படவில்லை என்றால் வருகிற 22-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம் காலை 10.45 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை நடந்தது. அதைத்தொடர்ந்து தொழிலாளர் ஆய்வாளர் லட்சுமிநாராயணன் அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மாதந்தோறும் குறை தீர்க்கும் கூட்டம்
அப்போது அவர், தொழிலாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாதந்தோறும் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு தொழிலாளர்களின் குறைகள் தீர்க்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
அதைத்தொடர்ந்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.